Arutperunjothi Vallalar Dharsan (Photo Credit: @saikibrahim X)

ஜனவரி 25, வடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் (Vadalur) நகரில் அருள்மிகு வள்ளலார் கோவில் (Vallalar Temple) அமைந்துள்ளது. இக்கோவிலில் வள்ளலார் ஜோதியாக காட்சிதரும் அன்று, இலட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வள்ளலாரின் அருளை பெறுவார்கள். வள்ளலாரால் ஏற்றிவைக்கப்பட்ட சுடரை இன்று வரை அணையாமல் பார்த்துக்கொண்டு, தினமும் அன்னதானங்களும் நடக்கின்றன. தைப்பூசத்தன்று நடைபெறும் ஜோதி தரிசன நிகழ்ச்சிக்காக சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் மட்டுமல்லாது, வெளிமாவட்டங்களில் இருக்கும் பக்தர்களின் வருகைக்கு வித்திடும் என்பதால் தைப்பூசம் அன்று வடலூர் நகரமே மக்கள் வெள்ளத்தால் குலுங்கும். இதனால் மக்களின் நலன்கருதி போக்குவரத்து சிரமங்களை குறைக்க சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

அருட்பெருஞ்ஜோதி தரிசனம்: உலகில் அனைவரும் சமம் என்பதை உணர்த்திய வள்ளலார் செய்த தொண்டுகளை, இன்று வரை அவரை பின்பற்றுபவர்கள் தொடர்ந்து வருகின்றனர். அருட்பெருஞ்ஜோதியாக 153வது ஆண்டாக இன்று காலை 6 மணியளவில் தோன்றிய வள்ளலாரை, பலரும் குடும்பத்துடன் நேரில் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோவில் திருவிழாக்கள் சென்றாலே இன்றளவில் மக்கள் எழுப்பும் கோவிந்தா, அரோகரா, நமச்சிவாய முழக்கங்களை விட விளையாட்டு பொருட்களாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் சத்தம் அதிகம். Annamalai Speech: "ஏமாற்றத்துடன் நேர்மையான அரசியலுக்கு காத்திருக்கும் தமிழ்நாடு மக்கள்" - அண்ணாமலை பேச்சு.! 

ஊதாங்குழலை பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை: இதனை வாங்கி தங்களின் கைகளில் வைத்துக்கொண்டு இளைஞர்களும் பயன்படுத்தி பலரை எரிச்சலடையும் வகையில் செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஆனந்தப்படுகின்றனர். வள்ளலாரின் கோவிலுக்கு வரும்போதாவது இதுபோன்ற விஷயங்களை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. வடலூரில் நடைபெறும் தைப்பூசம், வள்ளலார் ஜோதி தரிசன நிகழ்ச்சியை தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை உறுதி செய்ய 500 க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பொதுஇடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.