Entire 140 cr Indians are Hindu: "140 கோடி இந்தியர்களும் இந்துக்களே" - ஆர்.எஸ்.எஸ் இணைப்பொதுச்செயலாளர் மோகன் வைத்யா பேச்சு.!

நாக்பூர் நகரில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் துவங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மோகன் வைத்யா தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

RSS Joint General Secretary Dr Manmohan Vaidya (Photo Credit: @ANI X)

மார்ச் 15, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் (Mohan Bhagwat), ஆர்.எஸ்.எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபாவை (RSS) தொடங்கி வைத்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். Russia President Election: ரஷ்யாவில் அதிபர் தேர்தல்.. இன்று முதல் மூன்று நாட்களுக்கு வாக்குப்பதிவு..! 

அதிகரித்துள்ள பணிகள்: அதனைத்தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் இணைப்பொதுச்செயலாளர் மோகன் வைத்யா (Mohan Vaidya), "ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அனைவரும் சாதக பாதகமான சூழ்நிலையில் வேலைபார்த்து வரும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அனைத்து இடத்திலும் பணிகள் என்பது அதிகரித்து இருக்கின்றன. Mamata Banerjee Injury: மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கினார்; இரத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..! 

140 கோடி இந்தியர்களும் இந்துக்களே! இந்தியாவில் வசித்துவரும் 140 கோடி மக்களும் இந்துக்கள் ஆவார்கள். ஏனெனில் அவர்களின் முன்னோர்கள் அனைவரும் இந்துக்கள். நமது கலாச்சாரம் என்பது ஒன்றுதான். சிறுபான்மையினர் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். அவர்கள் மனதில் ஆர்.எஸ்.எஸ் குறித்து ஏற்பட்டு இருந்த பயம் விலகி, அவர்களும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நோக்கி வருகிறார்கள். இவர்களின் பங்களிப்பு அதிகரித்து இருக்கிறது" என தெரிவித்தார்.