Gautam Gambhir Viral Video in Oval (Photo Credit: @CineCricContext X)

ஜூலை 29, ஓவல் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ENG Vs IND) விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளது. ENG Vs IND 4th Test, Day 3: ஜோ ரூட் அபார சதம்.. இங்கிலாந்து அணி 186 ரன்கள் முன்னிலை..!

கவுதம் கம்பீர் கடும் வாக்குவாதம்:

இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 31) தொடங்கும் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தலைமை கண்காணிப்பாளர் லீ ஃபோர்டிஸுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளார். அதில், 'நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு சொல்ல வேண்டாம்' என்று கம்பீர் கோபத்துடன் பேசுவதை காண முடிகிறது. இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ இதோ: