Tiruvallur File Pic (Photo Credit : wikipedia / pixabay)

ஜூலை 5, சென்னை (Chennai News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆசூரி தெருவில் வசித்து வருபவை நாகராஜ் (வயது 50). இவர் அங்குள்ள இனிப்பகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி சுப்ரஜா. தம்பதிகளுக்கு மோகன் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் சம்பவத்தன்று சென்னைக்கு செல்வதற்காக திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு (Thiruvallur Railway Station) வருகை தந்துள்ளனர். சென்னை செல்லவேண்டிய மின்சார ரயில் 3வது நடைமேடையில் காத்திருந்துள்ளது. தொண்டையில் சிக்கிய பழ விதை.. 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி.. பெற்றோர்களே கவனம்.! 

அலட்சியம் & பதற்றம் கொடுத்த சோகம்:

இரயில் புறப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் இருந்த தம்பதிகள், நடைமேடையை பயன்படுத்தி தண்டவாளத்தை கடக்காமல் அலட்சியமாக தண்டவாளங்களுக்கு இடையே கடந்துள்ளனர். அப்போது, மைசூரில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்த வந்தே பாரத் அதிவிரைவு இரயில் (Chennai to Mysore Vande Bharat Train) தண்டவாளத்தில் வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத தம்பதிகள் பதறிப்போயினர். மேலும், இரயில் மோதியதில் நாகராஜ் தூக்கி வீசப்பட்டார். இதில் அவரின் உடல் துண்டு-துண்டாக சிதறிப்போனது.

மனைவி, மகன் கண்முன் பலி:

நாகராஜ் தனது மனைவி சுப்ரஜா, மகன் மோகன் கண்முன் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை நேரில் பார்த்து பேரதிர்ச்சியடைந்த இருவரும், நாகராஜின் உடலை பார்த்து கதறியழுதனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் இரயில்வே காவல்துறையினர், நேரில் வந்து நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், நாகராஜின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரயில் பயணிகள் கவனம்:

ஓடும் இரயிலில் ஏறுவது-இறங்குவது, தண்டவாளங்களை அலட்சியமாக கடக்க முயற்சிப்பது உயிருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் செயல் ஆகும். பயண நேரங்களை முன்கூட்டியே திட்டமிட்டு இரயில் நிலையங்களுக்கு சென்று காத்திருப்பது நல்லது. ஒருசில நேரங்களில் நமது அலட்சியம் மிகப்பெரிய துயரத்துக்கும் வழிவகை செய்யும் என்பதை மறக்க வேண்டாம்.