Election Heart Attack Death: இந்தியத் தேர்தல்கள் 2024: வாக்காளர், தேர்தல் அதிகாரி என இருவர் மாரடைப்பால் பலி.!
மக்களை வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி, வாக்களிக்க வந்த வாக்காளர் என இருவர் அடுத்தடுத்து மரணமடைந்த சோகம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
மே 13, ஹைதராபாத் (Hyderabad News): இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த 2024 மக்களவைத் தேர்தல்கள் (General Elections 2024) மூன்று கட்டத்தை நிறைவு செய்து, இன்று (மே 13, 2024) நான்காம்கட்ட வாக்குபதிவில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று காலை 7 மணி முதலாகவே மக்கள் பலரும் திரளாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகைதந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றுகின்றனர். இன்று ஆந்திரப்பிரதேசம் (Andhra Pradesh Assembly Elections 2024) மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம், ஜார்கண்ட் உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 மக்களவை (Lok Shaba Elections 2024) தொகுதிகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் முடிவுகள் அனைத்தும், ஏழு கட்ட தேர்தலும் நடைபெற்று முடிந்தபின்னர். ஒரேகட்டமாக ஜூன் மாதம் 04ம் தேதி அன்று வெளியாகிறது. CBSE 10th Results 2024: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; 93.60% தேர்வர்கள் தேர்ச்சி பெற்று சாதனை.!
இருவர் மாரடைப்பால் மரணம்: இந்நிலையில், அஸ்வாரோபேட்டை மண்டல் (Ashwaraopet), வேதாந்தபுரம் பகுதியைச் சார்ந்த வாக்காளர் காசி வெங்கடேஸ்வர ராவ் (வயது 54), தனது வாக்கை செலுத்துவதற்கு செல்லும்போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக பலியாகினார். மேலும், அஸ்வாராபேட் பேரைகுடம் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி ஸ்ரீ கிருஷ்ணா (வயது 42) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இருவரின் உடலும் காவல் துறையினரால் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்தாலும், தேசத்திற்காக ஜனநாயக கடமையாற்ற வந்த வாக்காளர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரி ஆகியோர் மரணமடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.