SC On Bail: நக்சலைட் கமாண்டரின் உறவினருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்; விபரம் இதோ.!

நாடு முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு, ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Supreme Court of India (Photo Credit: Wikipedia)

செப்டம்பர் 02, புதுடெல்லி (New Delhi): நக்சலைட் இயக்கங்கள் செயல்படும் மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்றாகும். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் சலாம் என்பவர் நக்சலைட் கமாண்டர் ராஜு சலாமின் மாமா என்றும், ராஜு சலாமுடன் நேரடியாகவும் தொடர்ந்து தொடர்பு கொண்டு அவருக்கு பொருட்களை சப்ளை செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டதால், மாநில நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) வழக்கு தொடர்ந்தார். Supreme Court: உச்சநீதிமன்றத்திற்கு புதிய அடையாளம்; கொடியை வெளியிட்ட குடியரசுத்தலைவர்.!

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முகேஷ்க்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நாடு முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு, ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.