Bulldozer Justice: "நீதிபதி எடுக்க வேண்டிய முடிவை எப்படி அதிகாரிகள் கையில் எடுக்கலாம்?" - அதிகாரிகளை விளாசிய உச்சநீதிமன்றம்..!
புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
நவம்பர் 13, புதுடெல்லி (New Delhi): உத்தரபிரதேசத்தில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது கிரிமினல் வழக்குகளில் வீட்டு உரிமையாளர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவரும்போது அவர்களின் வீடுகள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது புல்டோசர் கொண்டு வீடு இடிக்கப்படும். பின்னர் புல்டோசர் நடவடிக்கை மத்தியப் பிரதேசத்திலும் அஸ்ஸாமிலும் நடந்தது. இந்த நடவடிக்கையால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது, 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதற்கு ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அவரது முழு குடும்பமும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. Union Bank Recruitment 2024: பிரபல வங்கியில் 1500 காலிப்பணியிடங்கள்.. நாளை இறுதி நாள்.. இப்பவே விண்ணப்பிங்க..!
இந்த நிலையில், புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற (Supreme Court) நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டை புல்டோசர் மூலம் வீட்டை இடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், "நீதித்துறை பணிகளை அதிகாரிகள் கைகளில் எடுப்பதை ஏற்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர் என்ற காரணத்தால் வீட்டை இடிப்பது சட்டவிரோதம். வழக்கில் தண்டனை பெற்றாலும், வீடுகளை இடிக்க கூடாது. குற்றம் சாட்டினாலும் வீடுகளை எப்படி இடிக்கலாம்? நீதிபதி எடுக்க வேண்டிய முடிவை எப்படி அதிகாரிகள் கையில் எடுக்கலாம்?" என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
அதோடு, "சட்டவிரோத செயலை கையில் எடுத்து, வீடுகளை இடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய விதிமுறையின்றி கட்டப்படும் கட்டிடங்களை இடிக்க முழு அனுமதி உண்டு. அதிகாரிகள் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும். சட்டப்படியான நடைமுறைகளை மேற்கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக குற்றவாளிகளுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது'' என்றும் நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.