Passport Seva: அடுத்த 5 நாட்களுக்கு பாஸ்போர்ட் முன்பதிவு இணையம் செயல்படாது; பாஸ்போர்ட் சேவா அறிவிப்பு.!
பாஸ்போர்ட் பெற, புதுப்பிக்க முன்பதிவு செய்தவர்கள், அடுத்த 5 நாட்கள் பாஸ்போர்ட் சேவையை பெற அணுகப்பட்டு இருந்தால், அவர்களின் ஆவண சரிபார்ப்பு நாட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 29, புதுடெல்லி (New Delhi): வெளிநாடுகளுக்கு செல்ல முக்கிய ஆவணமாக தேவைப்படும் பாஸ்போர்ட், மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இணையவழியில் பாஸ்போர்ட் சேவா (Passport Seva) பக்கத்தில் முன்பதிவு செய்து, பின் மண்டல வாரியான பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். சில நாட்களில் காவல்துறை சரிபார்ப்பு முடிந்ததும், வீட்டிற்கு அஞ்சலில் நமக்கான பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். இன்றளவில் இணையமுறையில் இவை எளிதாக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், ஆன்லைன் வாயிலாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் இணையத்தளம் 5 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சந்திப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முன்னதாக திட்டமிடப்பட்ட முன்பதிவுகள் அனைத்தும் பிற தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பாஸ்போர்ட்க்கு புதிதாக விண்ணப்பிப்போர், தங்களின் சந்திப்புகளை வரும் 5 நாட்களுக்கு மேற்கொள்ள இயலாது எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Question Paper Leak: பி.எட் தேர்வுகள் வினாத்தாள் கசிவு?.. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடவடிக்கை.!
அடுத்த 5 நாட்களுக்கான முன்பதிவுகளில் மாற்றம்:
பாஸ்போர்ட் சேவா இணையத்தளத்தில் தொழில்நுட்ப சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இன்று (29 ஆகஸ்ட் 2024) இரவு 8 மணிமுதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 6 மணிவரை இணையதளம் செயல்படாது. இதனால் பயனர்கள் பாஸ்போர்ட் சேவா மையத்தை அணுக இயலாது. இடைப்பட்ட நாட்களில் உறுதி செய்யப்பட்ட முன்பதிவுகள் அனைத்தும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுகிறது. இதனால் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வண்ணம் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விரைந்து செயல்பட்டு பணிகள் நிறைவுபெற்றதும் அவை செயல்பாட்டுக்கு வரும். தொழில்நுட்ப மாற்றங்களை துரிதகதியில் மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் சேவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு: