Army Jawan Killed: ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. இராணுவ வீரர் கடத்திக்கொலை; எல்லையில் பதற்றம்.!
இதனால் ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு சூழல் உண்டாகியுள்ளது.
அக்டோபர் 09, அனந்த்நாக் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்து, அங்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் முதல்வராக உமர் அப்துல்லா செயல்படுவார். கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி வெற்றி அடைந்து இருந்தது. கடந்த பல மாதங்களாக தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். Tiruppur Accident: கார் - வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 பேர் பலி., 14 பேர் படுகாயம்.!
சடலமாக மீட்கப்பட்டார்:
ஆனால், இந்திய இராணுவம், மாநில காவல்துறை, சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடத்தப்பட்ட இராணுவ வீரர் ஹிலால் அகமது பட் என்ற இராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை இராணுவம் உறுதி செய்துள்ளது. தப்பி வந்த மற்றொரு இராணுவ வீரர் அளித்த தகவலின் பேரில், சிக்கிய இராணுவ வீரரை மீட்கும் பணிகள் நடைபெற்ற நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனந்த்நாக் பகுதியில் அவர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அங்குள்ள அனந்த்நாக், கோகர்னாக் பகுதியில் தேடுதல் வேட்டையை இராணுவம் தொடங்கியுள்ளது.
பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட காணொளி: