India Beats Pakistan in Asia Cup No Handshakes Amid Controversy (Photo Credit : @OsintTV / @MullahWithImran X)

செப்டம்பர் 16, துபாய் (Sports News): துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரின் ஆறாவது போட்டி, நேற்று முன் தினம் துபாய் சர்வதேச கிரிக்கெட் (Dubai International Cricket Stadium) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் (India Vs Pakistan) மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தி இருந்தனர்.

இந்திய அணி வெற்றி:

அதனைத்தொடர்ந்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.5 வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இந்திய வீரர்கள் அபிஷேக் ஷர்மா 13 பந்துகளில் 31 ரன்னும், திலக் வர்மா 31 பந்துகளில் 31 ரன்னும் அடித்து வெற்றிக்கு வழிவகை செய்தனர். கேப்டனான சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 47 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா Vs பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மோசமாகின. IND Vs PAK: இராணுவ வீரர்களுக்கு வெற்றியை சமர்ப்பித்த சூரியகுமார் யாதவ்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி வெற்றி..! 

கை குலுக்குவதை தவிர்த்த இந்திய வீரர்கள்:

இந்தியா எதிர் பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டியும் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலேயே நடைபெற்றது. மேலும், போட்டியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது. டாஸ் மற்றும் வெற்றிக்குப் பின் இருநாட்டு அணியினரும் கைகுலுக்காமல் விலகிச் சென்றனர். இந்த விஷயம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. மேலும் இந்திய அணியின் வெற்றியை ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்திருந்தார்.

போட்டியை விட்டு விலகும் பாகிஸ்தான்?

இந்த விவகாரம் (No Handshakes Controversy) சர்ச்சையாகி போட்டியின் நடுவர் ஆண்டி பைகிராப்டை நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வருகிறது. இந்த விஷயத்தை ஐ.சி.சி கவுன்சிலிடமும் பாகிஸ்தான் முறையிட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஐ.சி.சி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், போட்டியின் நடுவரை நீக்கும் மனநிலையில் ஐ.சி.சி இல்லை என்றும் கூறப்படுகிறது. நடுவரை நீக்காத பட்சத்தில் பாகிஸ்தான் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐ.சி.சி எடுக்கப்போகும் முடிவு என்ன?

இதனால் விரைவில் ஐ.சி.சி இது தொடர்பான முடிவை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி ஆசிய கவுன்சிலின் தலைவராக இருந்துவரும் நிலையில், ஐ.சி.சி இடம் பொறுப்பில் இருக்கும் ஜெய்ஷாவிடம் முறையிட்டு இருக்கிறார். இதனால் இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாடு எடுக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கை குலுக்குவதை தவிர்த்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் :