Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா... அரசின் ஆயுள் காப்பீடு திட்டம்... இதனைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.. வாங்க..!

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

PMJJBY (Photo Credit: @dioreasi1 X)

ஜனவரி 19, புதுடெல்லி (New Delhi): பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) 2015ஆம் ஆண்டு ஏழை-எளிய மக்களுக்கு காப்பீடு கி்டைக்கும் வகையில், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) என்ற திட்டத்தை கொண்டுவந்தார். இந்த திட்டத்தில் சேர 18 வயது முதல் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் கணக்கு வைப்பவர் ஆண்டுக்கு ரூ.436 செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்புள்ள இந்த ஆயுள் காப்பீட்டு தொகையைப் பெறலாம். ஆண்டுதோறும் இதை புதுப்பிக்க வேண்டும். Plane Catches Fire Mid-Flight: நடுவானில் பற்றி எரிந்த விமானம்... நடந்தது என்ன?.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ..!

பாலிசிதாரர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தாரருக்கோ, அல்லது பரிசிலனைக்கப்பட்டவருக்கோ தொகை வழங்கப்படுகிறது. இந்த பாலிசியை வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்தில் பெறலாம். இந்த காப்பீடு பெறுவதற்கு எந்த வித மருத்துவ பரிசோதனையும் செய்ய வேண்டியதில்லை.