Age Limit For Cigarettes: சிகிரெட் வாங்க வயது வரம்பு உயர்வு- குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகிறது சட்டம்.!
இன்றளவில் இளைஞர்களின் உடல்நலத்தை கெடுக்கும் சிகிரெட், மது போன்றவைகளுக்கு தடை விதிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அரசுகள், அதன் மீதான வரி மற்றும் அதற்கு பின் உள்ள மாபியாக்கள் லாபியை எண்ணி விற்பனைக்கு அனுமதி வழங்குகிறது.
செப்டம்பர் 20 , பெங்களூர் (Bangalore, Karnataka): கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்று பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார்.
தற்போது கர்நாடக மாநில அரசு ஒரு மிக முக்கிய விஷயத்தில் களமிறங்கி இருப்பதாக தெரிய வருகிறது. அதாவது கர்நாடக மாநிலத்தில் ஒரு சிகரெட் வாங்க குறைந்தபட்ச வயதாக இருக்கும் 18ஐ 21 ஆக உயர்த்த முடிவெடுத்துள்ளது. அதேபோல, ஹுக்கா புகையிலை விற்பனைக்கு தடை விதிக்கவும் முடிவெடுத்துள்ளது.
அரசின் இம்முடிவை மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், இளைஞர் நலன், விளையாட்டு, எஸ்டி நலத்துறை அமைச்சர் நாகேந்திரா ஆகியோர் செப்டம்பர் 19ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். ICC Men’s T20WorldCup 2024: அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் போட்டிகள்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
இது தொடர்பாக இருவரும் கூறுகையில், "மாநிலத்தில் இருக்கும் மக்களை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பாதுகாத்திடவும், குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டும் (Cigarettes and Other Tobacco Products Act COTPA) நமது மாநில அரசு சிகிரெட் வாங்கும் வயதை உயர்த்துகிறது. ஹுக்கா புகையிலை போதைப்பொருளுக்கு தடை விதிக்கிறது.
இளைஞர் மற்றும் எதிர்கால சந்ததியின் நலன் கருதி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் இதற்கான மாற்றங்கள் கொண்டுவரப்படும். வரும் குளிர்கால சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இந்த தடைகளுக்கான சட்டம் மற்றும் வயது வரம்புக்கான சட்டம் அமல்படுத்தப்படும்.
18 வயது மற்றும் அதற்கும் கீழ் வயதுள்ள சிறார்கள் கூட தற்போதைய அளவில் புகை உட்பட போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனை எதிர்காலத்தில் தவிர்க்க கட்டாயம் சட்டங்கள் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை அரசு உணர்ந்து இம்முடிவை எடுத்துள்ளது என அமைச்சர்கள் தெரிவித்தனர்.