செப்டம்பர் 20, நியூயார்க் (Cricket News): சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி (International Cricket Council ICC) அமெரிக்காவில் 2024 ஆடவர் டி20 போட்டிகளை நடக்க ஏற்பாடுகள் செய்துள்ளது. இதனால் அமெரிக்கா முதல் முறையாக டி20 போட்டிகளை தலைமையேற்று நடத்துகிறது.
அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் மாகாணத்தின் கிராண்ட் பராரியே (Grand Prairie in Dallas), புளோரிடா மாகாணத்தின் ப்ரொவார்ட் கவுண்டி (Broward County in Florida), நியூயார்க் மாகாணத்தின் நாஸு கவுண்டி (Nassau County in New York) ஆகிய இடங்களில் டி20 போட்டிகள் நடத்த உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா தலைமையேற்று நடத்தும் டி20 உலகக்கோப்பை 2024 போட்டியை மேற்கிந்திய தீவுகள் உதவி தலைமை பொறுப்பில் வழிநடத்துகிறது. இதற்காக அங்குள்ள மைதானங்களை தயார்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. India Vs Australia ODI Tour: இன்னும் 2 நாட்கள் தான்... இந்தியா Vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள்.. லிஸ்ட் இதோ.! முழு விபரம் உள்ளே.!
நியூயார்க் நகரில் போட்டித்தொடரின் துவக்க விழா நிகழ்வுகள் நடைபெறும். அங்கு 34 ஆயிரம் மக்கள் அமர்ந்து நிகழ்வுகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகளை ஐசிசி அமைப்பின் தலைமை அதிகாரி Geoff Allardice உறுதி செய்துள்ளார்.
மேலும், டி20 உலகக்கோப்பை 2024 போட்டியை மிகப்பிரம்மாண்டமான முறையில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த போட்டிகள் அமெரிக்காவுக்கு மீண்டும் பொருளாதார மற்றும் விளையாட்டு ரீதியாக நல்ல பலனை வழங்கும் என்றும் அவர் கூறினார்.