Hike In LIC Employees Salary: எல்ஐசி ஊழியர்களுக்கு உற்சாக செய்தி; 16% ஊதிய உயர்வுக்கு அனுமதி?.!
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் எல்.ஐ.சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளதால், அந்நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மார்ச் 15, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முமையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனம் உயிர் காப்பீட்டு நிறுவனம் (Life Insurance Corporation LIC). இந்தியாவின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமாக இருக்கும் எல்.ஐ.சி, ரூ.49.24 டிரில்லியன் டாலர் வருமானம் கொண்டது ஆகும். Paramilitary Parade Ahead Of Election: புவனகிரியில் துணை ராணுவ படை அணிவகுப்பு.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
மக்களுக்கான திட்டங்கள்: 95,700 ஊழியர்களுடன் மிகப்பெரிய மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் எல்.ஐ.சி வாயிலாக, மக்கள் தங்களுக்கான பல்வேறு உயிர் காப்பீடு திட்டங்களின் கீழ் இணைந்து பணத்தை செலுத்தி வருகின்றனர். இத்தொகை அவர்களின் திட்டத்திற்கேற்ப, உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றப்பட்டு வழங்கப்படும். Office Love Advise: அலுவலகத்தில் வரும் காதலால் ஆபத்தா..? – விவரம் இதோ..!
ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்: இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எல்.ஐ.சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில், தற்போது வரை அது தொடர்பான அறிவிப்பு இல்லை. தற்போது எல்.ஐ.சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2022 முதல் எல்.ஐ.சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வில், 16% க்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.