மார்ச் 15, கடலூர் (Cuddalore): உலகின் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இந்தாண்டு நாடாளுமன்றம் தேர்தல் (India general election) விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வருகிறது. மேலும் நாட்டில் உள்ள பதற்றமான இடங்களில் அதிகளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேர்தலை அமைதியாகவும் எவ்வித இடர்பாடின்றி நடத்திட பல்வேறு முன்னெடுப்பு பணிகளை செய்து வருகிறது தேர்தல் ஆணையம். Amitabh Bachchan Undergoes Angioplasty: சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி.. காரணம் என்ன?.!

அதன் ஒரு பகுதியாக இன்று கடலூர் மாவட்டம் புவனகிரியில் துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு பேரணி (Paramilitary troops held a parade) நடைபெற்றது. பாதுகாப்பு மற்றும் 100% வாக்களிப்பை முன்னிறுத்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் லட்சுமி உதவி காவல் ஆய்வாளர் மகேஷ் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.