மார்ச் 15, சென்னை (Life Style): நாம் வாழும் இந்த நவீன காலக்கட்டத்தில் உள்ள அலுவலக சூழலில் அதிக நேரம் சக ஊழியர்களோடு ஒன்றாக வேலை செய்ய வேண்டிய நிலைமை இருக்கிறது. அவர்களுடன் அதிக நேரம் பழகுவதால், சில நாட்களில் அது காதலாக கூட மாற வாய்ப்புள்ளது. இது போன்ற உணர்வுகள் வருவது சரியா அல்லது தவறா என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். Potato Mush Recipe: சுவையான உருளைக்கிழங்கு மசியல் செய்வது எப்படி?
ஒரு நிறுவனத்தில் ஒன்றாக சேர்ந்து பணிபுரியும்போது, அவர்களுக்குள் நல்ல புரிதலும் நெருக்கமும் ஏற்படுகிறது. இந்த உறவு அவர்களுக்கு நல்ல அர்த்தமுள்ளதாகவும் ஆழமானதாகவும் உள்ளது என கூறுகிறார்கள். மேலும், இருவருக்குமிடையே பலம் மற்றும் பலவீனம் நன்கு அறிந்துகொள்வதால், எளிதில் காதல் வயப்பட வாய்ப்புள்ளது. இதனால், நாம் வேலை பார்க்கும் இடத்திலும் தனிப்பட்ட முறையிலும் பயனுள்ளதாக உள்ளது. வேலை செய்யும் இடத்தில் காதல் வயப்பட்டால், பதட்டத்தோடு பணிபுரிய வேண்டும். இதனால் சில பிரச்சனைகள் ஏற்படும். மேலும், வேலை செய்யக்கூடிய இடத்தில் தன்னை விட மேலதிகாரியாக உள்ளவர்களுக்கும் இடையே பிரச்சனைகள் வர அதிகமான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். இவ்வாறு அடிக்கடி பிரச்சனைகள் வருவதால் கருத்துவேறுபாடு, பாரபட்சம் மற்றும் அலுவலக பணியாளர்கள் மத்தியில் மோசமாக செயல்படுவது என குற்றச்சாட்டுகள் நிகழும்.
அலுவலகத்தில் வேலை செய்யும் போது காதலில் இருப்பவர்கள் இருவருமே சில முடிவுகளை ஆரம்பத்திலேயே வகுத்துக் கொள்வது பிரச்சனைகள் வராமல் இருக்க வழிவகுக்கும். மேலும், இருவருக்குமிடையே ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியது அவசியம். பணிபுரியும் இடத்தில் அனைவரையும் சரிசமமாகவும் நியாயமான முறையிலும் நடத்த வேண்டும் என்று பல நிறுவனங்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றன.
மேலும், வேலை செய்யும் இடங்களில் காதலிப்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பமாகும். மேற்கொண்ட பதிவில் குறிப்பிட்டுள்ளப்படி இதில் ஆபத்துகளும் உள்ளன. எனவே, நன்கு சிந்தித்தப் பிறகு இந்த உறவை தொடரலாமா அல்லது விட்டுவிடலாமா என நீங்களே முடிவெடுங்கள்.