Love Couple Suicide: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை; அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு..!
பெங்களூருவில் ஒரே வீட்டில் வசித்து வந்த காதலர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 06, ஆனேக்கல் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆனேக்கல் தாலுகா, பன்னரகட்டா சாலை ஜனதா காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன் லக்கம்மா (வயது 30) என்ற பெண் வசித்து வந்தார். இவர், அங்குள்ள ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். காதலர்களான (Love Couple) இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். Son Disturbed His Mother: செல்போன் கேட்டு தொந்தரவு செய்த மகன்; தூக்குப்போடுவது போல் நடித்த தாய்க்கு நேர்ந்த சோகம்..!
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து, கடந்த 3 நாட்களாக அவர்கள் தங்கிருந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும், அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக பன்னரகட்டா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு அவர்களது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. மேலும், அவர்கள் இருவரும் விஷம் குடித்து (Poison Death) தற்கொலை செய்திருக்க கூடும் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் அவர்களது குடும்பத்தை பிரிந்து, தனியாக வேலை பார்த்துக் கொண்டு வாழ்ந்தது தெரியவந்துள்ளது. இதுவரை, அவர்கள் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.