Minor Died Lightning Attack: மின்னல் தாக்கி 16 வயது சிறுவன் பரிதாப பலி: கடற்கரைக்கு ஆசையாக சென்ற சிறுவன் பிணமாக வீடுவந்த சோகம்.!
பலத்த மழை, மின்னல் ஏற்படும் பட்சத்தில், திறந்த வெளிகளில் இருந்தால் ஏற்படும் ஆபத்து தொடர்பான விபரத்தை பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பதே ஆபத்தில் இருந்து விலக உதவி செய்யும்.
செப்டம்பர் 29, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, ஜூஹூ சவுபட்டி பகுதியை சேர்ந்த சிறுவன் ஹசன் யூசுப் ஷேக் (வயது 16). சிறுவன் சம்பவத்தன்று மாலை 04:15 மணியளவில் கடற்கரைக்கு சென்றுள்ளான்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் அங்கு வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்ட நிலையில், இறுதியாக விநாயகர் கரைக்கும் நிகழ்வை காணுவதற்கு சிறுவன் ஜூஹூ கடற்கரைக்கு சென்று இருக்கிறான்.
அங்கு மாலை நேரத்தில் கனமழை பெய்த நிலையில், சிறுவன் தனியே ஆசையாக கடற்கரைக்கு சென்று இருக்கிறான். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கவே, சிறுவன் கடற்கரையில் இருந்து கடல் நீருக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளான். Python on Truck: ஓட்டுநர் கேபினில் தலைகீழாக திடீரென நுழைந்த மலைப்பாம்பு; வாகனத்தை நடுவழியில் நிறுத்தி கதறிய ஓட்டுநர்.!
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மழை நேரங்களில் திறந்த வெளிகளில் இருக்கக்கூடாது என பெற்றோர் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அதேபோல, கல்வி நிறுவனங்களும் இயற்கை பேரிடர் தொடர்பான குறைந்தபட்ச விழிப்புணர்வுகளையாவது மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும்.