NIA Raid: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள் பகீர் தகவல் எதிரொலி: பெங்களூரில் 6 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனை..!

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் வகையில் இளைஞர்களிடையே மூளைச்சலவை செய்து, ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட நபர் தானேவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடந்ந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.

NIA (Photo Credit: @ANI X)

டிசம்பர் 13, பெங்களூர் (Bangalore): கடந்த டிசம்பர் 09ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) அதிகாரிகள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தானே, மிரா ரோடு, புனே, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஆகிய நகரங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 44 இடங்களில் மேற்கொண்ட சோதனையை தொடர்ந்து, 15 பேர் பயங்கரவாத தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டனர்.

சதித்திட்டத்துடன் காத்திருந்தது அம்பலம்: இவர்களிடம் அதிகாரிகள் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட அனைவரும் ஐஎஸ் ஐஎஸ் (ISIS Terrorist) பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது அம்பலமானது. இவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி, வெளிநாட்டை சேர்ந்த நபரின் அழைப்புக்காக அமைதியாக காத்திருந்துள்ளனர். Pongal Festival Bus Booking: அரசு பேருந்துகள் முன்பதிவு மையங்கள் திறப்பு: பொங்கல் 2024 பண்டிகைக்கு தயாராகும் போக்குவரத்துத்துறை.! 

முந்திக்கொண்ட என்ஐஏ: இதற்குள்ளாக என்ஐஏ அதிகாரிகள் பயங்கரவாத தொடர்பில் இருப்போரின் விபரத்தை தெரிந்துகொண்டு, அவர்களை கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், கட்டுக்கட்டாக பணம், செல்போன்கள், மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மடிக்கணினி மற்றும் செல்போன் போன்ற சாதனங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

என்ஐஏ சோதனை: இந்நிலையில், டிசம்பர் 13ம் தேதியான இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில், 06-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக கைது செய்யப்பட்டவர்கள் மும்பையில் உள்ள போரிவலி பகுதியை தலைமையிடமாக கொண்டு பயங்கரவாத ஆட்கள் சேர்ப்பு மற்றும் பயிற்சியும் வழங்கி வந்துள்ளனர். Covid-19 cases spike: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர் அரசு..! 

மூளைச்சலவை செய்து ஆட்கள் சேர்ப்பு: இவர்கள் இந்தியாவின் அமைதியை சீர்குலைத்து, ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் வேலையையும் திரைமறைவில் செய்திருக்கின்றனர். முக்கிய குற்றவாளியான தானே பகுதியை சேர்ந்த சாகிப் நச்சான் என்பவர், அங்குள்ள பதுகா கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

நாடடெங்கும் ஆதரவாளர்களை திரட்டியது அம்பலம்: இவர் அப்பகுதியை சேர்ந்த முஸ்லீம் இளைஞர்களிடையே நட்பை ஏற்படுத்தி, அவர்களை நாட்டுக்கு எதிராக மூளைச்சலவை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஐஎஸ் ஐஎஸ் அமைப்பை வழிநடத்த வாக்குறுதியும் எடுத்து செயல்பட்டு வந்துள்ளார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தை மையமாக வைத்து, திரைமறைவில் நாடெங்கும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் சேர்ப்பது, அதுசார்ந்த பரப்புரை மேற்கொள்வதும் நடந்துள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement