TN Govt SETC Bus (Photo Credit: www.tnstc.in)

டிசம்பர் 13, சென்னை (Chennai): 2023 ஆம் ஆண்டு நிறைவு பெற்று, இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. உலகமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக காத்திருக்கிறது. இந்த ஆங்கில புத்தாண்டைத் தொடர்ந்து, தமிழக மக்கள் பெருவாரியாக சிறப்பிக்கும் பொங்கல் பண்டிகையானது (Pongal 2024) ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வர உள்ளது. ஜனவரி 15, 16, 17, 18 ஆகிய நாட்களில் அறுவடை திருநாள், உழவர் திருநாள், காணும் பொங்கல் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இதில், ஜனவரி 14 போகிப் பண்டிகை அன்று, தலைநகர் சென்னை உட்பட வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் நபர்கள், தங்களது சொந்த ஊரை நோக்கி செல்வது வழக்கம்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள்: தற்போது பொங்கல் பண்டிகையானது திங்கட்கிழமை வருகிறது. இதனால் பெரும்பாலான வெளிமாவட்ட பயணிகள் தங்களின் சொந்த ஊருக்கு வார இறுதியான வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமைகளில் சொந்த ஊர் பயணிப்பார்கள். மக்களின் பயணங்களை கருத்தில் கொண்டு, அரசும் கூடுதல் பேருந்துகளை இயக்கும். பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகளில் இருந்து தொடங்கி பொங்கல் வரை சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு தினமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் தங்களின் இருக்கைகளை முன்பதிவு (Bus Ticket Booking) செய்ய, இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Andre Braugher Died: உளவாளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஆண்ட்ரே ப்ருக்ஹ்ர் காலமானார்: சோகத்தில் ஹாலிவுட் திரையுலகம்.! 

முன்பதிவு செய்யலாம்: பயணிகள் https://www.tnstc.in/home.html என்ற இணையத்தளத்தில் சென்றும், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்பதிவு மையங்களுக்கு சென்றும் பயணசீட்டுகளை முன்பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகைக்கு முன் சிறப்பு பேருந்துகளை சென்னையில் உள்ள பூந்தமல்லி, கே.கே நகர், கோயம்பேடு, தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பகுதி வாரியாக பிரித்து இயக்க அறிவுறுத்தப்படும். நாம் செல்லும் சொந்த ஊர் நோக்கி செல்லும் பயணசீட்டும், மீண்டும் திரும்ப சென்னை வரும் பயணசீட்டும் சேர்த்தே முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கிளம்பாக்கம் பேருந்து நிலையம்: தற்போது தென் மாவட்ட பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும், நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வண்டலூர் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 394 கோடி செலவில், 88 ஏக்கர் நிலப்பரப்பில், 2000 பேருந்துகளை ஒரே நேரத்தில் கையாளும் வகையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. Court Sends Arrested ED Officer To Police Custody: லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இறுதிக்கட்டத்தில் பணிகள்: பேருந்து நிலையத்தின் பணிகள் விறுவிறுப்புடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவை நிறைவுபெற்றால் தென்மாவட்ட பயணிகள் பேருந்து கோயம்பேடுக்கு பதிலாக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பணிகள் நிறைவு பெற பிப்ரவரி மாதம் ஆகலாம் என தெரியவருகிறது. இருப்பினும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.