Corona Virus (Photo Credit: who.int)

டிசம்பர் 13, சிங்கப்பூர் (Singapore): கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் (Corona Virus) தொடர்ந்து உலகத்தையே ஆட்டி படைத்தது. உலகமே ஊரடங்கு என்ற பெயரில் அடங்கிப் போனது. கொரோனாவால் பல கோடி மக்கள் உயிரிழந்தனர். பின் கொரோனா பாதிப்பு அனைத்தும் முடிவடைந்து, மக்கள் அனைவரும் தற்போது நிம்மதியாக இருந்து வருகின்றனர்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இந்நிலையில் திடீரென மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிங்கப்பூரில் 32,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் (Covid-19 cases) பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வருவதாகவும் கூறப்படுகிறது. Court Sends Arrested ED Officer To Police Custody: லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர் அரசு: இந்த கொரோனா தொற்று பரவலை தடுக்க சிங்கப்பூர் அரசு மக்களுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதன் படி கொரோனா பரவலை தடுக்க கூட்ட நெரிசலான இடங்களை தவிர்த்தல், முகக் கவசம் அணிதல், கொரோனா தடுப்பூசி போடுதல் போன்றவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சிங்கப்பூர் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தேவைப்பட்டால் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் உலக சுகாதாரம் மையம் தகவல் தெரிவித்துள்ளது