C-Vigil Citizens be Vigilant: தேர்தல் ஆணையத்தின் புதிய ஆப்.. இனி தேர்தல் அசம்பாவிதம் செய்வோர்க்கு 100 நிமிடத்தில் ஆப்பு..!
தேர்தல் ஆணையம் 'சி-விஜில் குடிமக்களே விழிப்புடன் இருங்கள்' என்ற செயலியை அறிமுகபடுத்தவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறியுள்ளார்.
மார்ச் 05, கொல்கத்தா (Kolkata): மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் (Chief Election Commissioner Rajiv Kumar) ஆலோசனை நடத்தினார். House of the Dragon Season 2: ஹவுஸ் ஆஃப் தி டிராகன் சீசன் 2.. வெளியாகும் தேதி அறிவிப்பு.. கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி..!
அப்போது, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது, "சி- விஜில்: குடிமக்களே விழிப்புடன் இருங்கள் (C-Vigil: Citizens be Vigilant) என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. தேர்தல் தொடர்பான விதிமீறல் அல்லது வன்முறைக்கு ஏதேனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டால், பயனர்கள் இந்த செயலி மூலம் புகாரளிக்க முடியும். அதன்படி 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவொரு வேட்பாளருக்கும் குற்றப் பின்னணி இருந்தால், அந்த வேட்பாளர்களையும் அவர்கள் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் அடையாளம் காண இந்த செயலியைப் பயன்படுத்தலாம். மேலும், வேட்பாளர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த செய்தித்தாள் விளம்பரங்களை வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களது அரசியல் கட்சிகளும் தங்கள் இணையதள செய்தித்தாள் விளம்பரம் மூலமாக அதை வெளியிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.