HOTD (Photo Credit @thecinemaland X)

மார்ச் 05, அமெரிக்கா (Cinema News): உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones). 8 சீசன்களைக் கொண்ட இத்தொடர் கடந்த 2019ம் ஆண்டு நிறைவுபெற்றது. ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் எழுதிய ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்தொடர் ஏராளமான விருதுகளைக் குவித்துள்ளது. எச்பிஓ நிறுவனம் இத்தொடரை தயாரித்திருந்தது. Toyota’s Electric SUV For India: டொயோட்டா களமிறக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?.!

இத்தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ (House of the Dragon) என்ற தொடரை எச்பிஓ (HBO) நிறுவனம் தயாரித்தது. இது ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நிகழ்வுகள் நடக்கும் காலத்துக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களத்தைக் கொண்டது. இந்த தொடரில் மாட் ஸ்மித் (Matt Smith), ஒலிவியா குக், எம்மா டி'ஆர்சி (Olivia Cooke, Emma D’Arcy), ஈவ் பெஸ்ட், ஸ்டீவ் டூசைன்ட், ஃபேபியன் ஃபிராங்கல் மற்றும் இவான் மிட்செல் ஆகியோர் நடித்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ தொடரின் முதல் சீசன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சீசன் ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.