Ram Navami Ayodhya Mandir Guidelines: ராம நவமிக்கு தயாராகும் அயோத்தி ராமர்.. கோயிலுக்கு வருவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு..!

தொடர்ந்து கோவிலுக்கு வருவோர்க்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

Sri Ram Navmi (Photo Credit: @neerajktiwari17 X)

ஏப்ரல் 15, அயோத்தி (Ayodhya News): கடவுள் ஸ்ரீ ராமர் பிறந்த நாளினை ராம நவமியாக (Sri Ram Navmi) இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி ராம நவமி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் ஸ்ரீராமனை வழிபவர்களின் வாழ்க்கையில் உள்ள தீங்குகள் ஒளியும் என்று நம்பப்படுகிறது. மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அயோத்தி கோவிலுக்கு இது முதல் ராமநவமி என்பதால், அதனைக் கோலாகலமாக கொண்டாடுவதற்கு விசேஷ ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து கோவிலுக்கு வருவோர்க்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Ayodhya Mandir Guidelines) அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்: ஸ்ரீராம நவமியை முன்னிட்டு வரும் பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீராம நவமி அன்று அதிகாலை 3.30 மணி முதல் பிரம்ம முகூர்த்தத்தில் பக்தர்கள் வரிசையில் நிற்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18 வரை அனைத்து வகையான சிறப்பு தர்ஷன், ஆரத்தி போன்றவற்றின் முன்பதிவு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. Rathnam Trailer: சமூகத்தில் கெட்டது செய்பவர்களை தூக்கிப்போட்டு மிதிக்கும் விஷால்.. ரத்னம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டும். மங்கள ஆரத்தி தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும். ஸ்ரீராம நவமியை முன்னிட்டு தரிசன நேரம் 19 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு பிறகு மட்டுமே தரிசனத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஸ்ரீ ராம் ஜன்மோத்சவ் அயோத்தி நகரில் சுமார் நூறு பெரிய LED திரைகள் மூலம் ஒளிபரப்பப்படும். அறக்கட்டளையின் சமூக ஊடக கணக்குகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். தரிசனத்தின் போது ஏற்படும் இடையூறு மற்றும் நேர விரயத்தைத் தவிர்க்க, பார்வையாளர்கள் தங்கள் மொபைல் போன்கள், விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றை கொண்டு வரக்கூடாது.