ஏப்ரல் 15, சென்னை (Cinema News): மார்க் ஆண்டனி படத்தில் கொடுத்த ஹிட்டினைத் தொடர்ந்து, நடிகர் விஷால் (Vishal) தற்போது இயக்குனர் ஹரியுடன் (Hari) கைகோர்த்துள்ளார். அதன்படி ஹரி இயக்கத்தில் ரத்னம் (Rathnam) படத்தில் நடித்தார். இப்படத்தின் சூட்டிங் ஆனது ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் (Priya Bhavani Shankar), ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் பாடலான 'டோண்ட் வரி டா மச்சி' மற்றும் 'எதனால' பாடல் வெளியானது. Woman Kills Snake: கடித்துச் சென்ற விஷப்பாம்பை.. அடித்துக்கொன்ற சிங்கப்பெண்.. வைரலாகும் வீடியோ..!
மேலும் இந்த படமானது ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் ஆனது தற்போது வெளியானது. இந்த ட்ரெய்லரில் நடிகர் விஷால் மாஸாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்தப் படமானது, அவரின் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.