ஜூலை 12, சான் பிரான்சிஸ்கோ (Technology News): கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் (YouTube) வீடியோ தளத்தை, 2.6 பில்லியன் மக்கள் உபயோகம் செய்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 462 மில்லியன் மக்கள் யூடியூபை பயன்படுத்துகின்றனர். யூடியூப் தளத்தில் நமக்கு தேவையான, தேவையில்லாத பல காணொளிகள் நிறைந்து கிடக்கின்றன. அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, காணொளியினை பிரித்து வழங்கும் சேவையை யூடியூப் செய்து வருகிறது. சில சமயங்களில் இவற்றில் ஆபாசமாக உள்ள காணொளிகள், அதுசார்ந்த ஆடியோ பதிவுகள் ஏராளம் என கூறலாம். நமது தேவையை பொறுத்து, கூகுளின் யூடியூப் (YouTube Videos) பக்கமும் வீடியோவை நமக்கு பரிந்துரை செய்யும். Gmail Update: ஜிமெயில் கொடுத்த அசத்தல் அப்டேட்.. பயனர்களுக்கு குட் நியூஸ்.! 

யூடியூபில் கட்டுப்பாடுகள் :

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு யூடியூப் மூலம் பணம் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சேனல்களில் பதிவேற்றம் செய்யக்கூடிய வீடியோக்களுக்கு பணம் வழங்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோ, திரைப்பட காட்சிகளை பயன்படுத்துவது, தரம் குறைந்து உருவாக்கப்படும் வீடியோ, ஒரே டெம்ப்லேட்டை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, மற்றவர்களின் வீடியோவை காப்பியடிப்பது, மீண்டும் மீண்டும் ஒரே வீடியோவை பதிவேற்றுவது, மற்றவர்களின் வீடியோவை திருத்தம் செய்து உபயோகிப்பது உள்ளிட்டவைகளுக்கு பணம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமல் :

தங்களது புதுமையான முயற்சியில் சொந்தமாக வீடியோக்களை தயாரிப்பவர்களை கருத்தில்கொண்டு இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இனி எடுக்கப்படும் விடீயோக்கள் மட்டுமல்லாது இதுவரை பதிவிட்ட விடீயோக்களையும் ஆராய்ந்து அவற்றை நீக்கம் செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.