India Russia Sign Key Deal: கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கம்... இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தப்பம்..!
தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிா்கால அணுஉலைகள் தொடா்பாக இந்தியா-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளது.
டிசம்பர் 27, திருநெல்வேலி (Tirunelveli): இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இந்த பயணத்தில், அவர் ரஷ்ய துணை பிரதமர் மற்றும் தொழில் வர்க்கத்துறை அமைச்சர் ஆன டேவிட் மாண்டுரோவ், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சொஜி லாவ்ரோவ் ஆகியோரை சந்தித்துள்ளார். அவர்களுடன் பல்வேறு இருதரப்பு சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் விவாதித்துள்ளார். Kanchipuram Encounter: ரௌடியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்: 2 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.! அதிரடி சம்பவம்.!
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், "இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு சிறப்பான பாதையில் பயணிக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த உறவு நிலையானது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய உலைகளை அமைப்பது தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளது. மேலும் மருந்துகள், மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் துறையில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.