
மார்ச் 17, டெல்லி (Delhi News): இந்தியா உதவியுடன் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரிய சக்தி மின் உற்பத்தி (Solar Power Plant) நிலையத்துக்கு, அடிக்கல் நாட்ட ஏப்ரல் முதல் வாரம், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இலங்கை செல்கிறார். மேலும், இரு நாடுகளிடையே பல புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன. இலங்கையில் அதிகரித்து வரும் மின் தேவைகளை சமாளிக்கும் வகையில், திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் புதிய அனல் மின்நிலையம் அமைக்க இந்திய-இலங்கை அரசுகளிடையே கடந்த 2011ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், சம்பூரில் அமைய உள்ள புதிய அனல் மின் நிலையத்தால் சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். Shocking Video: அதிக இரைச்சலுடன் இசைக்கச்சேரி.. தட்டிக்கேட்ட பெண்ணை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் கும்பல்.!
பிரதமர் மோடி இலங்கை பயணம்:
இதனையடுத்து, சம்பூரில் சூரிய மின் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் திட்டத்தை மாற்றியமைக்க இந்திய-இலங்கை அரசுகள் ஒப்புக்கொண்டன. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவை சம்பூரில் 100 மெகாவாட் சூரிய மின்சக்தி ஆலையை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டன. ஆனால், இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் அமைய உள்ள புதிய சூரிய மின் உற்பத்தி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.