AFG Vs SA | Match 3 | ICC Champions Trophy 2025 (Photo Credit: @ICC X)

பிப்ரவரி 21, லாகூர் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டித்தொடரில், மூன்றாவது ஆட்டம் இன்று (21 பிப் 2025) தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி - ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Afghanistan National Cricket Team vs South Africa National Cricket Team Timeline) -களுக்கு இடையே நடைபெறுகிறது. லாகூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற தென்னாபிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் ரியான் ரிக்கேல்டன் (Ryan Rickelton) 106 பந்துகளில் 103 ரன்கள், தம்பா பவுமா 76 பந்துகளில் 58 ரன்கள், ரஸீ வான் டுசென் 46 பந்துகளில் 52 ரன்கள், ஏய்டன் மார்க்கம் 36 பந்துகளில் 52 ரன்கள் அதிகபட்சமாக நடித்திருந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு தென்னாபிரிக்க அணி 315 ரன்கள் எடுத்தது. தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் அசத்தல் திறனை வெளிப்படுத்தியது. AFG Vs SA: சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று தென்னாபிரிக்கா பேட்டிங் தேர்வு., ஆப்கான்., பந்துவீச்சு.. அணி வீரர்கள் விபரம் இதோ.! 

தென்னாபிரிக்க அணி திரில் வெற்றி:

இதனால் 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, பந்துவீச்சில் தடுமாறியது. தென்னாபிரிக்க அணியினர் பந்துவீச்சை எதிர்கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, அணிக்கு ரன்கள் குவிப்பில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தான் அணி மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்ட போதிலும், அதனை முடிந்தளவு துரத்தியது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கிய ரஹ்மானுல்லாஹ் 14 பந்துகளில் 10 ரன்கள், இப்ராஹிம் 29 பந்துகளில் 17 ரன்கள், அடல் 32 பந்துகளில் 16 ரன்கள், ரஹ்மத் ஷா 92 பந்துகளில் 90 ரன்கள், ஓமர்சாய் 27 பந்துகளில் 18 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினர். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாபிரிக்க அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் காகிஸோ 3 விக்கெட், லுங்கி, வியான் தலா 2 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

பவ்மா கேட்ச் பிடித்து அசத்திய காட்சி: