Intel Layoffs: 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு.. இன்டெல் நிறுவனம் அதிரடி..!

இன்டெல் நிறுவனம் 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Intel Layoffs: 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு.. இன்டெல் நிறுவனம் அதிரடி..!
Intel Logo (Photo Credit: Wikipedia)

ஏப்ரல் 28, சாண்டா கிளாரா (World News): அமெரிக்காவை சேர்ந்த சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் (Intel), 20% பேரை பணிநீக்கம் (Layoff) செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. இன்டெல் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்று உள்ள லிப்-பு டான், நிறுவனத்தின் செயல்பாடுகளை மறுக்கட்டமைப்பு செய்யவுள்ளார். இதன் ஒருபகுதியாக 20% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இன்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இன்டெல் நிறுவனம் கடும் சவாலை சந்தித்து வருகிறது. 10 வயது மேற்பட்ட சிறார்களும் வங்கிக்கணக்கு தொடங்கலாம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. விபரம் இதோ..!

இன்டெல் பணிநீக்கம்:

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் இன்டெல் நிறுவனம் 12.7 பில்லியன் டாலர் வருவாயில் 800 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் இன்டெல் 18.8 பில்லியன் டாலர் நிகர இழப்பை சந்தித்தது. இதனால், கடந்த ஆண்டு கூட இன்டெல் நிறுவனம் சுமார் 15 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டான், நிறுவனத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து அதன் போட்டித்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சிகளை தனது திட்டத்தின் மூலம் எடுத்துரைத்து, 1200 வார்த்தைகள் கொண்ட கடிதத்தை ஊழியர்களுக்கு பகிர்ந்து கொண்டார்.

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).