India Stock Market: உலக பங்குச்சந்தை தரவரிசை... 4வது இடம் பிடித்த இந்தியா..!

உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

Sensex (Photo Credit: Pixabay)

ஜனவரி 23, புதுடெல்லி (New Delhi): ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியா, ஹாங் காங்கை (Hong Kong) முதல் முறையாக பின்னுக்குத் தள்ளி, உலகின் 4வது மிகப் பெரிய பங்குச் சந்தையாக மாறியுள்ளது. இத்தரவரிசையில் அமெரிக்கா, சீனா,ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளது. China Earthquake: சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... டெல்லி வரை உணரப்பட்ட அதிர்வு..!

நேற்று இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மூலதன பங்குகள் மதிப்பு $4.33 ட்ரில்லியன் டாலரைத் தொட்டது. மேலும் ஹாங்காங் மதிப்பு $4.29 ட்ரில்லியன் டாலர் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று காலை வர்த்தகத்தில், இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 537.27 புள்ளிகள் உயர்ந்து 71,960.92 புள்ளிகளை எட்டியுள்ளது.