Ek Ped Maa Ke Naam: "ஏக் பெட் மா கே நாம்.." சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி செய்த செயல்..!

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி 'ஏக் பெட் மா கே நாம்' பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

Ek Ped Maa Ke Naam (Photo Credit: @ANI X)

ஜூன் 05, புதுடெல்லி (New Delhi): உலக சுற்றுசூழல் தினமானது 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜீன் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 1972ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித சுற்றுச்சூழல் மாநாடு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. இந்த நாளை கௌரவிக்கும் வகையில், 1973ஆம் ஆண்டில், உலகம் தனது முதல் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது. அப்போதிருந்து, உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. How to Recover From Job Loss: தொடரும் வேலை வெட்டு பிரச்சனை... இஎம்ஐ, கடனில் மாத தவணை செலுத்துவோருக்கு ஷாக் செய்தி.. செய்யவேண்டியது என்ன?.!

இந்த நாள் மனித செயல்கள் நமது சுற்றுச்சூழலுக்கு மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்துவதால், நமது உயிர்க்கோளத்திற்கு மேலும் சேதம் ஏற்படுவதைக் குறைக்க அல்லது தடுக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்பதை நினைவுறுத்துகிறது. இன்றைய சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி 'ஏக் பெட் மா கே நாம்' (தாயின் பெயரில் ஒரு மரம்) (Ek Ped Maa Ke Naam) பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். மேலும் டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் பிரதமர் மரக்கன்று நட்டார். அவருடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா ஆகியோரும் பங்கேற்றனர்.