ஜூன் 05, புதுடெல்லி (New Delhi): லட்சக்கணக்கில் பட்டதாரிகள் நாள்தோறும் வேலைத்தேடி அலைகிறார்கள். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் நம் வேலையை தக்கவைப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாக உள்ளது. அதிலும் இப்போதெல்லாம் ஐ.டி கம்பெனிகளில் திடீரென்று பர்ஃபாமன்ஸ் சரியில்லை என்றெல்லாம் ஆள்குறைப்பு, மூன்லைடினிங் காரணமாக அதிக அளவில் வேலையிழப்பும் நடைபெறுகிறது. வேலையிழப்பு ஏற்பட்ட பின் அடுத்த வேலை தேடிகொள்ள சில மாதங்களாவது தேவைப்படும். அப்போது நிகழும் நம் நிதிபிரச்சனையை எவ்வாறு சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.
புதிய வேலை கிடைக்கும் வரை நீங்கள் நிதிநெருக்கடிக்குத் தள்ளப்படுவீர்கள். வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே முன்னெச்சரிக்கை என்பது தேவை. முதல் மாதம் சம்பளம் வாங்கியதிலிருந்து சிறிது சேமிப்பு என்பது அவசியமே. செலவு போக மீதத்தை சேமிக்கலாம் என்றில்லாமல் சேமிப்பு போக மீதியை செலவு செய்யப் பழகுங்கள். அப்போது தான் எதிர்பாராத நேரத்தில் உதவியாக இருக்கும்.
தங்கள் சம்பளத்தை தாண்டிய செலவுகள் செய்வதை நிறுத்துங்கள். ஆடம்பர செலவுகள் பேராபத்தே. விலையுயர்ந்த வீட்டுப் பொருட்கள் வாங்க நினைத்தால், ஏற்கனவே கட்டிக் கொண்டிருக்கும் மற்ற கடன்களை அல்லது இ.எம்.ஐ களை செலுத்திய பின்பு அடுத்த பொருள் வாங்கலாம். வேலை இழந்த சமயத்தில் இது போன்ற பொருட்கள் வாங்காமல் இருப்பது நல்லது. தங்கள் வங்கி கணக்கில் உங்கள் சம்பளத்தை போன்று 2 மடங்கு தொகை வைத்திருப்பது சிறந்தது.
தங்கள் வேலை நிரந்தரமானதில்லை என்று தோன்றுகையில், சம்பள பணத்தில் சிறிது தொகையை எப்போதும் முதலீட்டிற்கென்று ஒதுக்க வேண்டும். வேலை இழந்த காலத்தில் இந்த தொகை ஒரு சிறு தொழில் தொடங்கக் கூட பெரு உதவியாக இருக்கும்.
சிலர் தங்கள் பணத்தை எதிர்கால சேமிப்பிற்காக தங்கத்தில் முதலிடுவர். ஆனால் தங்கம் விலை என்பது நிரந்தரமானது இல்லை. நம் அவசரத்திற்கு விற்கும்போது தங்கத்தின் விலை சரிந்திருந்தால், நஷ்டமாக வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக நிலத்தில் முதலிடலாம். அது வேலை இழந்தகாலத்தில் உதவும். வீட்டில் ஏதேனும் தங்கம் எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். World Environment Day 2024: "நாம் பூமியின் நிரந்தரமல்ல.. பூமிதான் மனிதருக்கான நிரந்தரம்.." உலக சுற்றுச்சூழல் தினம்..!
தங்கள் கடன்களையும், சொத்து மதிப்பையும் கணக்கிட்டு கொள்ளங்கள். அதற்கேற்றார் போல் மட்டும் கடன்களை வாங்குங்கள். சம்பளம் அதிகம், வங்கிகள் அதிகமாக கடன்கள் தருகிறார்கள் என்பதற்காக அளவுக்கு மீறி கடன்கள் வாங்கினால், வேலையிழந்த காலத்தில், இவைகளுடன் பள்ளிக்கட்டணம் மற்றும் இதர செலவுகள் என அனைத்தும் ஒன்றாக வந்துவிடும்.
வேலையிழந்தவுடன் செலவுகள் நினைத்து கவலைப்படாமல், அடுத்து என்ன செய்யலாம் , செலவுகளை சமாளிப்பது பற்றி வீட்டில் கலந்துரையாடி முடிவெடுக்கலாம்.
உடனடியாக அடுத்த வேலையை தேட வேண்டும். புது வேலைக்கிடைக்கும் வரை உங்களுடைய துறையில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். எதுவும் செய்யாமல் மட்டும் இருக்க கூடாது.
தங்களுக்கு தெரிந்த வேலையை செய்யலாம். உதாரணாமாக வீட்டிலே டியூசன் எடுக்கலாம். அல்லது தங்கள் துறை பற்றி பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கலாம்.
அதே நேரம் வேலை இழப்பு ஏற்பட்ட காரணத்தை ஆராயுங்கள். அந்த தவறு மீண்டும் நிகழாமல் இருக்குமாறுப் பார்த்துக் கொள்ளவேண்டும். எப்போதும் தங்கள் திறமையை புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.