Pilgrims Return Without Entering Sabarimala: சபரிமலையில் தரிசனம் செய்யாமலேயே திரும்பும் பக்தர்கள்... நெரிசலான சபரிமலை..!

சபரிமலையில் கூட்டம் அதிகமானதால் தரிசனம் செய்யாமலே பக்தர்கள் அனைவரும் செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது.

Sabarimala Rush (Photo Credit: @iyer_rn x)

டிசம்பர் 12, திருவனந்தபுரம் (Thiruvananthapuram): மண்டலகால மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் சுவாமி (Sabarimala Sree Ayyappan Temple) கோயில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட ஆரம்பத்தில் அங்கு பக்தர்கள் கூட்டம் சாதாரணமாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக சபரிமலை கூட்டம் அதிகரித்துள்ளது.

நெரிசலான சபரிமலை: அதுமட்டுமின்றி இந்த ஆண்டு தற்போது வரை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 18 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். சிலர் எவ்வளவு காலம் காத்திருந்தாலும் தரிசனம் செய்ய முடியாமல் பாதியிலேயே திரும்பும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். நெரிசலில் நிறைய பேர் மயக்கம் அடைந்து விழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. CBSE Exam Date 2024: சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு... முழுத்தகவல் இதோ...!

தரிசன நேரம் நீட்டிப்பு: தற்போது இந்த பிரச்சனை அனைத்தையும் சமாளிப்பதற்காக தரிசன நேரத்தினை சபரிமலையில் நீட்டித்துள்ளனர். அதன்படி மாலை 4 மணிக்கு பதில் மதியம் மூன்று மணிக்கு நடை திறக்கப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் இரவு 11 மணி வரை மட்டுமே தரிசிக்க அனுமதி இருப்பது குறிப்பிடத்தக்கது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif