Sabarimalai Makara Jyothi Live (Photo Credit: @PBSHABD X)

ஜனவரி 14, சபரிமலை (Kerala News): கேரளா மாநிலம் சபரிமலை (Sabarimala Ayyappa Temple) ஸ்ரீ ஐயப்பன் கோவிலில்,14 ஜனவரி 2025 இன்று மகரவிளக்கு (Makaravilakku) பூஜை / மகர ஜோதி (Makara Jyothi) கொண்டாடப்படுகிறது. இன்று மாலை 05:30 மணிக்கு மேல் மகரஜோதி நிகழ்வும் நடைபெறுவதை நேரில் காண, ஐயப்ப பக்தர்கள் பலரும் விரதம் இருந்து சபரிமலை சென்றுள்ளனர். மகரஜோதி நிகழ்வை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்ளுக்கும் முன்னதாகவே ஆன்லைன் வழியாக அனுமதி வழங்கப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள், மகரவிளக்கு நிகழ்ச்சியை பக்தர்கள் சிரமம் இன்றி கண்டுகளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், தொலைக்காட்சிகளில் நேரலை ஒளிபரப்பிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Pongal Rangoli Design: பொங்கல் கோலம் 2025; அசத்தல் கோலங்கள் இதோ.! 

டிடி தொலைக்காட்சி & சமூக வலைப்பக்கங்களில் நேரலை:

இந்த நாளில் திரளாக வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க 5 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் சபரிமலை, பம்பை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று 1.5 இலட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காலை 10 மணிக்கு மேல் பம்பையில் இருந்து நிலக்கல் நோக்கி வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் என தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளன. இன்றைய நாளில் மாலை 5 மணிக்கு மேல் ஐயப்ப பக்தர்கள் வீட்டில் இருந்தபடி, டிடி தொலைக்காட்சி, நேரலை நிகழ்ச்சிகளில் மகர ஜோதியை கண்டுகளிக்கலாம். அதற்கான இணைப்பு இத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

மகரஜோதியை நேரலையில் கண்டு அருள்பெற லிங்கை கிளிக் செய்யவும்: