ஜனவரி 14, சபரிமலை (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை (Sabarimala Ayyappa Temple) ஐயப்பன் கோவிலில், 14 ஜனவரி 2025 இன்று மகரவிளக்கு (Makaravilakku) பூஜை / மகர ஜோதி (Makara Jyothi) நிகழ்வு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சபரிமலையில் 5000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இன்று ஒரேநாளில் இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது. Makaravilakku 2025: இன்று மகரவிளக்கு பூஜை: ஜோதியை நேரலையில் காணுவது எப்படி? விபரம் உள்ளே.!
மாலையில் ஜோதி தரிசனம்:
இன்று மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி திருவிழாவின் முக்கிய அம்சமான ஜோதி தென்படும். இந்நிலையில், 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை வந்துள்ள பக்தர்கள், இன்று 18 படிகளை கடந்து சுவாமி ஐயனை மனமுருகி தரிசனம் செய்து வருகின்றனர். விழாக்காலத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் பெரும்வகையில், விரைந்த தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய 18 படிகளை ஏறும் பக்தர்கள்:
Watch | Devotees throng Sabarimala Temple in large numbers to offer prayers to Lord Ayyappa on the occasion of Makaravilakku festival in #Kerala #SabrimalaTemple pic.twitter.com/YEGRkDpJFL
— The Times Of India (@timesofindia) January 14, 2025