ஜனவரி 14, சபரிமலை (Kerala News): கேரள மாநிலம், சபரிமலை (Sabarimala Ayyappa Temple) ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 14 ஜனவரி 2025 இன்று மகரவிளக்கு (Makaravilakku) பூஜை / மகர ஜோதி (Makara Jyothi) கொண்டாடப்படுகிறது. இன்று மாலை 05:30 மணிக்கு மேல் மகரஜோதி நிகழ்வு நடைபெறுவதை நேரில் காண, ஐயப்ப பக்தர்கள் பலரும் விரதம் இருந்து சபரிமலை சென்றுள்ளனர். மகரஜோதி நிகழ்வை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்ளுக்கும் முன்னதாகவே ஆன்லைன் வழியாக அனுமதி வழங்கப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள், மகரவிளக்கு நிகழ்ச்சியை பக்தர்கள் சிரமம் இன்றி கண்டுகளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், தொலைக்காட்சிகளில் நேரலை ஒளிபரப்பிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. Makaravilakku 2025: இன்று மகரவிளக்கு பூஜை: ஜோதியை நேரலையில் காணுவது எப்படி? விபரம் உள்ளே.!
அலைமோதும் பக்தர்கள் கூட்டம்:
இந்நாளில் திரளாக வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க 5 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் சபரிமலை, பம்பை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு மேல் பம்பையில் இருந்து நிலக்கல் நோக்கி வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் என தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளன.
மகரவிளக்கு பூஜை:
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மேல் மகரவிளக்கு பூஜை தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் சாமி ஐயப்பன் அருள்பாலித்தார். பக்தர்கள் "சுவாமியே சரணம் ஐயப்பா", "மகர ஜோதியே சரணம் ஐயப்பா" என கோஷமிட்டனர். அதன் வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஜோதி வடிவில் அருள்பாலித்த சாமி ஐயப்பன்:
జ్యోతి స్వరూపనే..శరణం అయ్యప్ప
పొన్నంబలమేడుపై భక్తులకు దర్శనమిచ్చిన మకరజ్యోతి..#SwamiyeSaranamAyyappa #MakaraJyothi#Makaravilakku #makarasankranti2025 #MakaraJyoti pic.twitter.com/3TuXqPtOki
— Dhanpal Suryanarayana (@Dhanpal_Suranna) January 14, 2025