PM Modi On Yoga Day 2024: "ஆலும் வேரும் பல்லுக்குறுதி, யோகா செய்தால் உயிருக்குறுதி" யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்..!
யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
ஜூன் 11, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் 5000 ஆண்டிகளுக்கு முன்பு தோன்றிய பழமையான யோகா பயிற்சியை உலக மக்கள் அனைவரும் முன்னெடுத்து பயன்பெற்று வருகிறார்கள். யோகா செய்வதால் உடல் நலன் தவிர மனநலன் சிறப்பாக நிர்வகிக்க முடியும். யோகா மன அழுத்தத்தைசமாளிக்க உதவுகிறது. இதனால் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று ஐநா பொதுசபையில் இந்திய பிரதமர் மோடி சர்வதேச யோகா தின யோசனையை முன்மொழிந்தார். அதை தொடர்ந்து ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்தனர். எனவே சர்வதேச யோகா தினம் (Yoga Day) ஆண்டுதோறும் ஜூன் 21 (21 June 2024) ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. Woman Strangles Son For Stealing Money: திருடிய குழந்தை.. கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்.. திரிபுராவில் பரபரப்பு..!
பிரதமர் மோடி ட்வீட்: இந்நிலையில் யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அவர், "இன்னும் பத்து நாட்களில், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடும் காலமற்ற பயிற்சியைக் கொண்டாடும் 10வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது. யோகா என்பது கலாச்சார மற்றும் புவியியல் எல்லைகளைத் தாண்டி, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை முழுமையான நல்வாழ்வைத் தேட உதவுகிறது. இந்த ஆண்டின் யோகா தினத்தை முன்னிட்டு, யோகாவை நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். மற்றவர்களையும் யோகா செய்ய ஊக்குவிப்பது அவசியம். யோகா அமைதியை வழங்குகிறது. அமைதி மற்றும் தைரியத்துடன் வாழ்க்கையின் சவால்களை வழிநடத்த உதவுகிறது. மேலும் யோகா தினம் நெருங்கி வருவதால், பல்வேறு ஆசனங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் வீடியோக்களின் தொகுப்பை நான் இங்கு பகிர்கிறேன். இது உங்கள் அனைவரையும் தொடர்ந்து யோகா பயிற்சி செய்ய தூண்டும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.