Woman Strangles Son For Stealing Money: திருடிய குழந்தை.. கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்.. திரிபுராவில் பரபரப்பு..!
திரிபுராவில் ஒரு பெண் தன் ஒன்பது வயது மகன் திருடியதற்காக கழுத்தை நெரித்துக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 11, திரிபுரா (Tripura News): திரிபுராவில் மாநிலம் அகர்தலாவில் உள்ள ஜாய்நகரைச் சேர்ந்தவர் சுப்ரபா பால். இவர் கட்டுமான தளத்தில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கணவரை காணவில்லை என்றும், இவரது மகளுக்கு திருமணமாகிவிட்டதாகவும், அதனால் இவரது ஒன்பது வயது மகனை தனியாக வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. Saliva Face Massage in UP: முகத்திற்கு எச்சில் துப்பி மசாஜ் செய்த சலூன் கடைக்காரர்.. உத்திர பிரதேசத்தில் பரபரப்பு..!
இந்நிலையில் அவரது மகன் ராஜ்தீப்பின் தொடர்ந்து பணத்தை திருடி, படிப்பை புறக்கணித்துள்ளார். இதனால் சுப்ரபா அவரது மகனின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். மேலும், தனது மகன் ராஜ்தீப்பின் இடைவிடாத தவறான நடத்தையால் தான் அதிகம் பாதிக்கப்பட்டதாக அவர் காவல்துறையினரிடம் கூறி சரண் அடைந்துள்ளார். அதுமட்டுமின்றி, "என் மகனின் செயலால் என்னால் வேலைக்குச் செல்லவோ அல்லது நிம்மதியாக வாழவோ முடியவில்லை. எனவே கொன்றேன், அதற்காக சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 03:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

