PM Narendra Modi Chairs His First Union Cabinet Meeting: மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடி.. தொடங்கிய முதல் மத்திய அமைச்சரவை கூட்டம்..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Union Cabinet Meeting (Photo Credit: @ANI X)

ஜூன் 10, புதுடெல்லி (New Delhi): நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து டெல்லி ராஷ்டிரபதி பவனில் (Delhi Rashtrapati Bhavan) நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu) முன்னிலையில், பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியின் அமைச்சரவையில் மொத்தம் 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதல் கையெழுத்து: இந்நிலையில் 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 6000 வரை நிதியுதவி வழங்குகிறது. இந்த நிதி உதவியானது பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 16 தவணை நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், PM-Kisan திட்டத்தின் 17-வது தவணைக்கு (17th instalment of PM Kisan Nidhi) பிரதமர் மோடி கையெழுத்திட்டார். Weapon Public Review: தமிழில் வெளியான சூப்பர் ஹியூமன் படம்.. மக்களின் கருத்தை நேரடியாக திரையரங்கிற்கே சென்று கேட்டறிந்த நடிகர்.. வைரலாகும் வீடியோ..!

முதல் மத்திய அமைச்சரவை கூட்டம்: இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் (Union Cabinet Meeting) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ராஜ்நாத், அமித்ஷா, நட்டா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இது முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் என்பதால், முதல் 100 நாள்களுக்கான செயல்திட்டம், மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து, இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif