Matrimony Scam: மேட்ரிமோனி மூலம் 259 பெண்களிடம் மோசடி... காவல்துறையினரிடம் சிக்கிய பலே ஆசாமி..!

பெங்களூரில் ஆன்லைன் மேட்ரிமோனி இணையதளங்களின் மூலம் 259 பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட மோசடி மன்னனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Matrimony Scam (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 29, பெங்களூர் (Bangalore): கோயம்புத்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மறுமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியில் (Matrimony) பதிவிட்டு இருந்துள்ளார். அதனைப் பார்த்த ஒருவர் தனக்கு 25 வயது என்றும், தான் பெங்களூரில் சுங்கத்துறை அதிகாரியாக பணிப்புரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் சிறிது நாட்கள் பேசியுள்ளனர். அப்போது அந்த இளைஜர், அந்த பெண்ணை குடும்பத்துடன் பெங்களூர் வரவைத்துள்ளார். அப்பெண்ணும் குடும்பத்துடன் பெங்களூர் சென்றுள்ளார்.

அங்கே சென்றவுடன், அந்த இளைஜன் தனக்கு இன்று வேலை இருப்பதாகவும் தனது மாமா அவர்களை சந்திப்பதாகவும் கூறியுள்ளார். அதே போன்று 45 வயது உடைய ஒருவர் வந்து அப்பெண்ணின் குடும்பத்தை சந்தித்து, ரூ.10,000 வாங்கி சென்றுள்ளார். அவர் மீண்டும் வரும் வரை காத்திருந்த குடும்பத்தினர், நீண்ட நேரம் ஆனதைத் தொடர்ந்து அவர்க்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் அவர் எடுக்கவில்லை. அதே சமயம், சுங்கத்துறை அதிகாரியின் எண்ணும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். Rise In Vegetables Price: மீண்டும் உச்சத்தில் காய்கறி விலை.. படுதவிக்கும் பொதுமக்கள்..!

புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் 2 செல்போன் எண்களுமே ஒரே நபரின் பெயரில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவரது பெயர் நரேஷ் புஜாரி கோஸ்வாமி என்பது தெரியவந்தது. மேட்ரிமோனி இணையதளங்களில், இளைஞர்களின் புகைப்படங்களை வைத்து, விதவைகள், விவாகரத்து பெற்றவர்களை குறிவைத்து இதே போன்று பல ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், இதுவரை 10 மாநிலங்களைச் சேர்ந்த 259 பெண்களை, வெவ்வேறு பணிகளில் இருப்பதாக கூறி ஏமாற்றியதற்கான ஆதாரங்களையும் காவல் துறையினர் அவரிடம் இருந்து திரட்டியுள்ளனர். இதையடுத்து நரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.