Vegetables (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 29, சென்னை (Chennai): தமிழகத்தில், ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரவழைக்கப்படும். இருப்பினும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வருகின்றது. இந்நிலையில், பனி காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து வருவது குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விற்பனை விலையானது சற்று அதிகரித்துள்ளது. BCCI Annual Contracts: ரஞ்சி ஆடு.. இல்லையேல் ஓடு.. வீரர்களை விரட்டி அடிக்கும் பிசிசிஐ..!

அதன்படி கேரட் விலை ரூ.100யைத் தொட்டுள்ளது. இது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.