ஜூலை 15, சென்னை (Cinema News): ஈ-சலான் என்ற பெயரில் ஒரு லிங்கை அனுப்பி மர்ம நபர்கள் தனது வாட்ஸ்அப் ஹேக் செய்துவிட்டதாக நடிகர் அபிஷேக் தெரிவித்துள்ளார். தமிழில் கோலங்கள், செல்லமே உட்பட பல பிரபலமான சின்னத்திரை தொடர்களிலும், திரையுலகில் துப்பறிவாளன், ஆம்பள படத்தில் குணச்சத்திர வேடத்திலும் நடித்து பிரபலமான நடிகர் அபிஷேக். இவர் ஈ-சலான் மோசடியில் சிக்கி தனது வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதாக சைபர்கிரைமில் புகார் அளித்துள்ளார்.
வாட்ஸ்அப் மோசடி :
இது சம்பந்தமான விழிப்புணர்வு வீடியோவையும் நடிகர் வெளியிட்டுள்ளார். நடிகரின் வாகன பதிவெண்ணுடன், செல்போன் நம்பரை இணைத்து போக்குவரத்து காவல்துறை சலான் அனுப்பியது போல வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்துள்ளது. இதனை பார்த்த நடிகரும் ஒரு கணம் யோசிக்காமல் வாட்ஸ்அப் லிங்கை கிளிக் செய்துள்ளார். இதனால் அவரது வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்ட நிலையில், டிபியில் ஆந்திரா காவல்துறை வாசகத்துடன் புகைப்படம் மாறியுள்ளது.
ஹேக் செய்த கும்பல் :
இதனால் தனது வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதாக நடிகர் அபிஷேக் சைபர் கிரைமில் புகாரளித்தார். இதனை தொடர்ந்து தற்போது காவல்துறையினர் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் நடிகர் அபிஷேக் கேட்டு கொண்டுள்ளார்.
நடிகர் அபிஷேக்கின் விழுப்புணர்வு வீடியோ :
View this post on Instagram