IPL Auction 2025 Live

Monkey Fever: திடீரென பரவும் குரங்கு காய்ச்சல்... கர்நாடகாவில் மேலும் இருவருக்கு பாதிப்பு..!

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

Monkey Fever (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 08, கர்நாடகா (Karnataka): குரங்கு காய்ச்சல் என்று அழைக்கப்படும் கியாசனூர் ஃபாரஸ்ட் டிசீஸ் (Kyasanur Forest Disease) கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக காணப்படுகிறது. முன்னதாக, இதனால் குரங்குகள் (Monkey) மட்டும் பாதிக்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில், இது மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸானது பாதிப்பிற்கு ஆளான விலங்குகள் சாப்பிட்டு விட்டு போட்ட உணவுப் பொருட்கள் மூலம் பரவுகிறது. இவை சாப்பிட்ட உணவுகள் ஆங்காங்கே சிதறி கிடந்தால் அவற்றை தொடும் மனிதர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது. இந்த பாதிப்பு வந்துவிட்டால் தலைவலி, உடல் வலி, வாந்தி, அடிவயிற்றில் வலி, திடீர் காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஆகிய அறிகுறிகள் தென்படும். Smartphone Tips: உங்களது ஸ்மார்ட்போன் ஸ்லோவாக இருக்கிறதா? அதனை சரிசெய்வதற்கான எளிய வழிமுறைகள் இதோ..!

தற்போது கர்நாடகாவில், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 170 பேருக்கு குரங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 2 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய்க்கு இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நோயை கட்டுப்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து தீவீரம் காட்டி வருகிறது.