அக்டோபர் 23, சென்னை (Health News Tamil): ஒவ்வொரு மழைக்காலமும் வைரஸ் நோய்த்தொற்றுகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது ஆகும். இந்த காலகட்டத்தில் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் நபர்களையும் வைரஸ் காய்ச்சல்கள், சளித் தொல்லை வாட்டி வதைக்கும். குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், எளிதில் சளி மற்றும் காய்ச்சல் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். அதனால், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகளை பின்வருமாறு பார்க்கலாம்.
உடல் சூடுக்கு இஞ்சி:
இஞ்சியில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, வைரஸ் எதிர்ப்பு திறன், அலர்ஜி எதிர்ப்பு பண்பு போன்றவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும். தொண்டை புண், சளி, இருமல், செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும். உடலை சூடாக வைத்திருக்கவும், நோய்தொற்றில் இருந்து விலகி வைக்கவும் இஞ்சி உதவும். Health Warning: சமோசா பிரியரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த முக்கிய தகவல்.!
காயம் சரியாக மஞ்சள்:
இயற்கையான நோயெதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சள், உடலில் இருக்கும் வீக்கத்தை குணப்படுத்தவும், காயம் விரைவில் சரியாகவும் உதவும். முக்கியமாக நோய்தொற்றை தடுக்கும். சளி, தொண்டைப்புண், வைரஸ் தொற்றுக்கு தீர்வாக அமையும்.
நோயெதிர்ப்பு சக்திக்கு துளசி:
பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, வைரஸ் எதிர்ப்பு திறன், ஆக்சிஜனேற்ற பண்பு என பலவகை குணங்களை கொண்ட துளசி சளி, காய்ச்சல், இரும்பல், தொண்டைப்புண் என பலவகை விஷயங்களுக்கு தீர்வு தரும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வெகுவாக அதிகரிக்கும்.
வைரஸ் தொற்று அகல நெல்லிக்கனி:
வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட நெல்லிக்காய், உடலில் ஆக்சிஜனேற்றியை அதிகரிக்க உதவும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி வலுப்படும். பாக்டீரியா, வைரஸ் தொற்றுகள் நம்மை நெருங்காது. Diwali Special Recipe: தீபாவளி 2025 ஸ்பெஷல்.. 30 நிமிடத்தில் ஈசியாக செய்யக்கூடிய மைசூர் பாக் மற்றும் தேங்காய் பர்ஃபி ரெசிபி.!
செரிமானத்துக்கு தயிர்:
வயிறு சார்ந்த பல நோய்களை அதிகம் ஏற்படுத்தும் மழைக்காலத்தில், தயிர் ஏராளமான நன்மைகளை வழங்கும். தயிரில் இருக்கும் புரோபயாடிக் உட்பட நல்ல பாக்டீரியாக்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தும். நோயெதிர்ப்பு சக்திக்கு உதவும்.
வைரஸ் எதிர்ப்புக்கு பூண்டு:
வெள்ளைப்பூண்டில் காணப்படும் அல்லிசின் பாக்டீரியா, வைரஸை எதிர்த்து போராடும். இதனால் சளி, இருமல், காய்ச்சல் தொற்றுகள் தடுக்கப்படும். இது தவிர்த்து பாதாம், வால்நட், முந்திரி போன்றவை சாப்பிடலாம். உடலுக்கு நன்மை தரும் பழங்களையும் சாப்பிடலாம். காய்ச்சல் தொடர்பான அறிகுறி இருப்போர், வீட்டிலேயே சுயமாக மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவமனைக்கு செல்வது நல்லது.