பிப்ரவரி 08, சென்னை (Chennai): இன்று எல்லார் கையிலும் ஸ்மார்ட்போன் (Smartphone) எப்பவும் உள்ளது. இந்த செய்தியை கூட அதில் தான் எல்லாரும் படித்து இருப்பீர்கள். அப்படிப்பட்ட ஸ்மார்ட் போன், பல நேரங்களில் மெதுவாக (Hanging Problem) செயல்படும். அதற்கு காரணம் நீங்கள் மொபைலை அப்டேட் செய்யாமல் இருப்பது. ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அப்டேட்ட செய்ய வேண்டும். அதாவது உங்களது போன் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் என்று எதுவாக இருந்தாலும் அவற்றைச் சரியாக அப்டேட் செய்ய வேண்டும்.
உங்களது போனில் தேவையில்லாத ஆப்ஸ்களை நீக்குவது மிகவும் அவசியமான ஒன்று. அதே நேரம் நீங்கள் குறைந்த விலை போன்கள் அல்லது பழைய பயன்படுத்துகிறீர்கள் என்றால், பெரிய அளவிலான ஆப்ஸ்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. Ranji Trophy Free Tickets: கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.... ரஞ்சிக்கோப்பை அனுமதி இலவசம்..!
ஸ்மார்ட்போன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அதன் வேகம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உங்களது ஸ்மார்ட்போனை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வது மிகவும் அவசியம். போனின் ஸ்க்ரீனை அவ்வப்போது சுத்தம் செய்வது மிகவும் நல்லது. பின்பு டூப்ளிகேட் சார்ஜர் பயன்படுத்துவது கூட போனின் வேகத்தைக் குறைக்கும். எனவே, ஒரிஜினல் சார்ஜரைப் பயன்படுத்துவது நல்லது.