Child Abuse: விடுதியில் தங்கிபயின்ற 14 வயது மாணவிக்கு பிரசவம்.. காரணம் யார்?.. சல்லடைபோட்டு தேடும் அதிகாரிகள்.!

கர்நாடகாவில் வயிற்றுவலியால் துடித்த 14 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

ஜனவரி 11, கர்நாடகா (Karnataka): கர்நாடக மாநிலம் துமகூரு டவுன் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகின்றனது. அந்த பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, அருகில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று சிறுமியின் உடல்நிலை திடீரென மோசமானது. இதையடுத்து சிறுமி சிக்பள்ளாப்பூரில் உள்ள பாகேபள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மேலும் அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் அங்கு வந்தனர். Trending Video: உயிரிழந்த தந்தை சடலத்தின் வாயில் மது ஊற்றி இறுதி மரியாதை; சுடுகாட்டில் மகன் செய்த செயல்.. வைரல் வீடியோ.!

இந்த நிலையில், சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதும், அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து பாகேபள்ளி காவல் துறையினர்க்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி பதில் கூறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கை துமகூரு டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றினர். அதன்பேரில் துமகூரு காவல் துறையினர் சிறுமியை பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement