Kolkata Tram End of Era: முடிவுக்கு வருகிறது கொல்கத்தாவின் சகாப்தம்; டிராம் சேவைக்கு முடிவுகட்டியது மேற்குவங்க அரசு.!
டிராம் சேவைகள் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காரணத்தால், அந்த சேவையை முடிவுக்கு கொண்டு வருவதாக மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 29, கொல்கத்தா (West Bengal News): மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவின் (Kolkata Tram) முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருப்பது டிராம் சேவை. கடந்த 1873ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா நகரில் அமலில் இருக்கும் டிராம் சேவை, நகரின் வளமான மற்றும் பாரம்பரிய, தனித்துவ அழகின் அடையாளமாக இந்திய அளவிலும் கவனிக்கப்பட்டது. கொல்கத்தா மக்களின் உயிர்நாடியாக கருதப்படும் டிராம் சேவை, கிட்டதட்ட 150 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவை கொல்கத்தா மட்டுமல்லாது பாட்னா, மும்பை, நாசிக், சென்னை ஆகிய நகரங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு இருந்தன. பின் அவை படிப்படியாக அகற்றப்பட்டன. Gingee Fort: உலகளவில் கவனம்பெறப்போகும் செஞ்சிக்கோட்டைக்கு விரைவில் யுனெஸ்கோ அங்கீகாரம்; அமைச்சர் உறுதி; மக்கள் மகிழ்ச்சி..!
மிகப்பழமையான டிராம் சேவை:
இந்தியாவிலேயே டிராம் சேவை 2024ம் ஆண்டிலும் கொல்கத்தாவில் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வந்தது. இதனால் கொல்கத்தாவுக்கு செல்லும் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலாப்பயணிகள், ட்ராமில் பயணம் செய்து மகிழ்ந்து வந்தனர். அதேபோல, அங்குள்ள மக்களும் ட்ராமையே பிரதானமாக போக்குவதரத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். கடந்த 1900 ஆண்டு முதல் டிராம் மின்சார உதவியுடன் இயங்கி வந்துள்ளது. அதற்கு முன்பு குதிரையில் தொடங்கி, நீராவியில் இயங்கி வந்தது. கடந்த 2013ம் ஆண்டு ஏசி பயன்பாடு கொண்ட ட்ராம்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
டிராம் சேவை நிறுத்தம் (End of Era Tram Service):
இந்நிலையில், டிராம் சேவை போக்குவரத்து சிக்கல் குறித்த பிரச்சனைகள் காரணமாக நிறுத்தப்படுவதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சினேஷாஸிஸ் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் டிராம் சேவை முடிவுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ட்ராம் பயனர்கள் சோகத்தில் இருக்கின்றனர். டிராம் சேவையை பெரும்பாலான போக்குவரத்து நெரிசல் கொண்ட இடங்களில் இருந்து முற்றிலும் அகற்ற திட்டமிட்டுள்ள அம்மாநில அரசு, எச்பிளனேட் - மைதானம் இடையே மட்டும் டிராம் சேவை நடைபெறும் என தெரிந்துள்ளது. கொல்கத்தாவில் வசித்து வரும் ஏழை, எளிய மக்களின் வரப்பிரசாதமாக இருந்த ட்ராம் சேவை, தனது இறுதிக்கட்டத்தை நிறைவு செய்கிறது. இது வறுமைக்கோட்டில் வாழும் மக்களுக்கு பேரிடியே என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசின் முடிவை எதிர்த்து போராட்டமும் நடக்கிறது.
முடிவுக்கு வந்தது கொல்கத்தாவின் சகாப்தம்:
டிராம் சேவையை நிறுத்த கொல்கத்தா அரசு முடிவு:
டிராம் சேவை முடிவுக்கு வருவதால் வருத்தத்தில் அதன் பயணிகள்: