செப்டம்பர் 28, செஞ்சி (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி (Gingee), செஞ்சிக்கோட்டை மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டில் பல்லவர்களின் பெருமை மற்றும் தமிழர்களின் கட்டிடவியலை போற்றும் விதமாக மகாபலிபுரம் கடற்கரை கோவில் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளால் அதிகாரம் கவரப்படும் ஒன்று ஆகும். அதே அளவுக்கு வரவேற்பை பெரும், எஞ்சிய இந்திய அரசாட்சி கோட்டைகளில் முக்கியமான ஒன்று செஞ்சிக்கோட்டை (Gingee Fort).
விரைவில் யுனெஸ்கோ அங்கீகாரம்:
தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் செஞ்சிக்கோட்டைக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விரைவில் யுனெஸ்கோ குழு செஞ்சிக்கு வந்து, அதன் வரலாற்று தொடர்புடைய தகவலை சேகரித்து அங்கீகாரம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, நேற்று செஞ்சிக்கோட்டைக்கு வந்த யுனெஸ்கோ குழு, செஞ்சிக்கோட்டையை ஆய்வு செய்தது. மேலும், அதிகாரிகள் வழங்கிய வரலாற்று தகவலையும் குறித்துக்கொண்டது. இதனால் விரைவில் செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செஞ்சிக்கோட்டை தொடர்பாக செஞ்சி ட்ராவலர் (Gingee Traveller) பக்கத்தில் தொடர் பல்வேறு காணொளிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. Gingee Fort: செஞ்சிக்கோட்டையை கட்டியது யார்? கிடைத்தது புதிய ஆதாரம்; அசத்தல் விபரம் உள்ளே.!
அமைச்சர் பாராட்டு & நன்றி:
இதனிடையே, யுனெஸ்கோ குழுவின் ஆய்வுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "நம் பெருமைமிக்க செஞ்சிகோட்டை நேற்று யுனெஸ்கோ (UNESCO) குழுவினரால் ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் போது உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கியது இந்த செஞ்சி கோட்டை என யுனெஸ்கோ குழுவினர் சொன்ன போது அகம் மகிழ்ந்தோம்.
செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினத்தில் இவ்வாய்வு மேற்க்கொண்டது மேலும் ஒரு சிறப்பம்சமாகும். நமது செஞ்சி கோட்டையின் பெருமையை உலகறியச் செய்வதற்கு வருகை புரிந்த யுனெஸ்கோ குழுவினருக்கும், இந்த ஆய்வு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர்,கூடுதல் ஆட்சியர், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும், செஞ்சியின் பெருமையை உலகறியும் இந்த ஆய்விற்கு துணை நின்ற செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர் . விஜயகுமார் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும், அனைத்து வகையிலும் நம்ம கோட்டை நம்ம பெருமை என கடந்த 7 நாட்களாக மரபு நடை நிகழ்ச்சி முதல் யுனெஸ்கோ ஆய்வு வரை முன்னின்று பணிகளை மேற்க்கொண்ட செஞ்சி பேரூராட்சி தலைவர் கே.எஸ்.எம் மொகாதியார் மஸ்தான் உள்ளிட்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கும் , அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என அனைவரும் மீண்டும் ஒரு முறை நன்றி பாராட்ட கடமை பட்டுள்ளேன். இணையத்தில் செஞ்சி கோட்டையின் பெருமையை தொடர்ந்து வெளிக்கொண்டு வரும் செஞ்சி ட்ராவலர் (Gingee Traveller) குழுவினருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ அங்கீகாரம் முக்கியம் ஏன்?
வரலாற்றுசிறப்புமிக்க இடத்திற்கு கிடைக்கும் யுனெஸ்கோ அங்கீகாரம், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும். இதனால் உள்ளூரில் பொருளாதாரம் முன்னேறும். வெளிநாட்டவர்கள் நமது நாட்டின் வரலாறுகளை தெரிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமையும். எதிர்காலத்தில் போர்க்காலங்கள் உண்டானால், யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கி காப்புரிமை செய்த இடத்தில் தாக்குதல் என்பது நடத்தப்பட்டது. இது உலகளாவிய சட்டத்தில் சாராம்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகும். செஞ்சிக்கோட்டையை புதுப்பிக்க உலகளாவிய நிதிகளும் கிடைக்கும். பிரதான சுற்றுலாத்தலமாகவும் இருக்க யுனெஸ்கோ அங்கீகாரம் முக்கியம் ஆகும்.