Ban On Single-Use Plastic: கல்லூரிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - யுஜிசி அறிவிப்பு..!

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என யு.ஜி.சி. அறிவுறுத்தி இருக்கிறது.

UGC (Photo Credit: @ugc_india X)

நவம்பர் 08, டெல்லி (Delhi): பிளாஸ்டிக் பயன்பாடு உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. பல நாடுகளில் இந்த பிளாஸ்டிக்கை (Plastic) அறிவியல் ரீதியாக மறுசுழற்சி செய்ய முடியவில்லை. இந்தியா போன்ற பல நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் பெரிய சவால்களை எதிர்கொள்கின்றன. அந்த வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) வகுத்துள்ளது. இதனை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி (UGC) அறிவுறுத்தி இருக்கிறது. Ruckus in JK Assembly: மூன்றாவது நாளாக தொடர் அமளி; ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் மோதல்..!

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முறையாக தடைசெய்ய வேண்டும்.
  • பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும்.
  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் கருத்தரங்கங்களை நடத்த வேண்டும்.
  • அனைத்து மாணவர்களும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பல்கலைக்கழகங்கள், கல்லூரிக்குள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
  • வீடுகளிலும் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
  • பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்க்க வளாகங்களில் வாட்டர் டேங்குகள் போன்ற மாற்று வசதிகளை நிறுவ வேண்டும்.
  • துணி, காகிதப் பைகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement